Categories
சினிமா தமிழ் சினிமா

கவலையில் இருக்கும் ரஜினிக்கு…. மின்னல் வேகத்தில் வந்த ‘குட் நியூஸ்’…. என்னன்னு பாருங்க….!!!!

தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்தால் ரஜினி தற்போது சோகத்தில் உள்ளார். இதனால் ரசிகர்களும், திரையுலகினரும் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினிக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் நற்செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது ரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு வெளியான “அண்ணாத்த” திரைப்படம் நல்ல வசூலை ஈட்டியுள்ளது. மேலும் சன் டிவியில் “அண்ணாத்த” படம் கடந்த பொங்கல் அன்று ஒளிபரப்பானது. அந்த திரைப்படம் தொலைக்காட்சியில் முதன்முறையாக வெளியாகி TRP-யில் சாதனை படைத்துள்ளது.

அதாவது “அண்ணாத்த” படம் கிட்டத்தட்ட 21.60trp புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனின் டாக்டர், அஜித்தின் விசுவாசம், விஜய்யின் மாஸ்டர் என அனைத்து படங்களின் சாதனையையும் முறியடித்து “அண்ணாத்த” திரைப்படம் புதிய சாதனையை படைத்துள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் தற்போது ஆறுதல் அடைந்துள்ளனர்.

Categories

Tech |