Categories
மாநில செய்திகள்

கவலைப்படாதீங்க…! இது அம்மாவின் அரசு…. மகிழ்ச்சியாக இருங்க… முக்கிய செய்தி சொன்ன எடப்பாடி …!!

திருவள்ளூர்அடுத்த மணவாளன் நகர் பகுதியில் விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, இன்றைய தினம்  வேளாண் பெருமக்கள், நெசவாளர் என இரு பிரதிநிதிகளும் இங்கே அவர்களுடைய கருத்துக்களை எடுத்து வைத்தார். வேளாண் பெருமக்களை  பொறுத்த வரைக்கும், இங்கே நெல் கொள்முதல் நிலையம் வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்கள்.

அதை அம்மாவுடைய அரசு ஏற்படுத்தி கொடுக்கும் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். கடந்த ஆண்டு தமிழகத்திலே இதுநாள் வரை இல்லாத அளவிற்கு டெல்டா  மாவட்டங்களிலே அரசின் சார்பாக சுமார் முப்பத்தி இரண்டு லட்சத்தி நாற்பத்தி ஓராயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை படைத்த அரசு அம்மாவுடைய அரசு.

அதற்கு முன்பு இருபத்தி ஏழு லட்சம் மெட்ரிக் டன்னுக்கு மேல் கொள்முதல் செய்தது கிடையாது. அந்த இருபத்தி ஏழு லட்சம் மெட்ரிக் டன் மேலாக இன்றைக்கு டெல்டா பாசனத்தில் நெல் கொள்முதல் செய்து அரசு ஒரு வரலாற்றுச் சாதனை படைத்திருக்கின்றது. அதற்கு காரணம் உரிய நேரத்தில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கடைமடை வரை குறித்த காலத்திலேயே தண்ணீர் போய் சேர்ந்தது. அனைத்து விவசாயிகளும் சரியான நேரத்தில் வேளாண் பணியை மேற்கொண்டார்கள், நடவு செய்தார்கள், இதனால் விளைச்சல் அதிகமாக இருக்கின்றது. அதே போல இன்றைக்கு வேளாண் பெருமக்கள் மகிழ்ச்சி அடைவதற்காக மாண்புமிகு அம்மாவுடைய அரசு பல்வேறு திட்டங்களை திட்டி  செயல்படுத்தி கொண்டு இருக்கின்றது என முதல்வர் பெருமிதம் கொண்டார்.

Categories

Tech |