Categories
அரசியல் மாநில செய்திகள்

“கவர்னர் கொடுக்கும் தேநீர் விருந்து”…. புறக்கணித்த தமிழ்நாடு அரசு…. எதற்காக தெரியுமா?…..!!!!!!

குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய விழாநாட்களில் கவர்னர் மாளிகையில் கவர்னர் தேநீர் விருந்துக்கு அழைப்பது வழக்கம் ஆகும். இந்நிகழ்ச்சியில்முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., முதலமைச்சரின் செயலாளர்கள் மற்றும் முக்கியமான அரசு அதிகாரிகள் கலந்துகொள்வது வழக்கம் ஆகும். கடந்த குடியரசு தினத்தில் கொரோனா காரணமாக கவர்னரின் தேநீர் விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சித்திரை மாத முதல் தேதியான தமிழ் புத்தாண்டு தினத்தன்று (நேற்று) கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து வழங்கபடுவதால் அதில் தமிழக அரசு மற்றும் அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்று கவர்னர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இந்நிகழ்ச்சியை புறக்கணிக்கப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட சில கட்சிகள் முன்பே அறிவித்திருந்தது.

இந்த நிலையில் நேற்று காலை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் போன்றோர் ராஜ்பவனுக்கு சென்றனர். அங்கு கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியதாவது “நீட் தேர்வை தமிழ்நாட்டில் விலக்க வேண்டும் என சட்டசபையில் சட்ட மசோதாவை நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக உங்களிடம் அனுப்பி வைத்தோம். ஆனால் அதனை நிறைவேற்றி அனுப்ப நீங்கள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. சில வாரங்களுக்கு முன் உங்களை சந்தித்து முதலமைச்சர் கேட்டபோதும் அதனை விரைவாக அனுப்புவதாக குறிப்பிட்டிருந்தீர்கள். எனினும் அதனை இன்னும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவில்லை. இது முதலமைச்சருக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது எங்கள் பிரச்சினை மட்டுமல்லாது, மக்களின் ஒட்டுமொத்த பிரச்சினையாக இருக்கிறது. அத்துடன் மாணவர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகும். ஆகவே இவற்றில் நடவடிக்கை எடுக்காதது, சட்டமன்றத்தின் மாண்பை குறைப்பதாக இருக்கிறது.

எனவே மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் அடிப்படையில் நீங்கள் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம் என்று கவர்னர் ஆர்.என்.ரவியிடம் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் சார்பில் யாரும் வரவில்லை. மேலும் முதலமைச்சர் புறக்கணிப்பதாக நேற்று காலையில் அமைச்சர்கள் தெரிவித்ததை அடுத்து, தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் கவர்னர் அளித்த தேநீர் நிகழ்ச்சியை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து விட்டனர். திமுக. சார்பிலும் யாரும் இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கவில்லை. அதுமட்டுமல்லாமல் தி.மு.க .கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் புறக்கணித்தன.

Categories

Tech |