நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கவர்ச்சியில் களமிறங்கி உள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் “காக்கா முட்டை” படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் இவர் பக்கம் திருப்பினார். ஒரு முன்னணி கதாநாயகி ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க வேண்டுமென்றால் நடிகைகள் பெரும்பாலும் மறுப்பர். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் தயக்கமின்றி தன்னம்பிக்கையுடன் படத்தில் நடித்தார்.
அந்தப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பை அனைவரும் பாராட்டினர். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அண்மையில் வெளிவந்த “திட்டம் 2” படம் அனைவரும் பாராட்டும் வண்ணம் இருந்தது. இவர் தெரிவு செய்யும் படங்கள் பெரும்பாலும் கிராமத்து பெண்ணாக நடித்து இருப்பார்.
இவர் முன்னணி நடிகர்களான தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். மலையாள படமான “ஜோமோண்டே சுவிசேஷங்களில்” நடிகர் துல்கர் சல்மானுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். இந்நிலையில் மற்றொரு மலையாள படமான “புலிமட” படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது கவர்ச்சியில் களம் இறங்கியுள்ளார். தன்னுடைய திரைப்படங்களிலும் வித்தியாசம் காட்ட துவங்கியுள்ளார். மேலும் தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியாக எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.