Categories
உலக செய்திகள்

கவனமா இருங்க…. செல்போனில் மூழ்கிய மாணவன்…. பறிபோன உயிர்….!!

செல்போன் பேசிக்கொண்டே மாடியில் இருந்து கீழே விழுந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ஹைதராபாத் மாநிலத்தை சேர்ந்த மாணவர் அகில். இவர் கனடாவிலுள்ள ரொறொன்ரோ பகுதியில் தங்கி இருந்த ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வந்தார். கடந்த எட்டாம் தேதி வீட்டின் பால்கனியில் நடந்து கொண்டிருந்த அகில் செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். அச்சமயம் திடீரென தடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்தார்.

இதனால் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஹைதராபாத்தில் இருக்கும் உறவினர்களுக்கு கனடாவில் உள்ள அகிலின் நண்பர் தகவல் கொடுத்தார். மார்ச் மாதம் விடுமுறைக்காக ஹைதராபாத்துக்கு வந்த அகில் சமீபத்தில்தான் கனடாவிற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |