ஓட்டுனர் கள்ள காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள குன்றத்தூர் பகுதியில் லட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். கணவரை விட்டு பிரிந்த லட்சுமி தனது 3 மகள்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு லட்சுமி கழுத்தை அறுத்து ஆடைகள் கிழிந்த நிலையில் அரை நிர்வாண கோலத்தில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லட்சுமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் லட்சுமி வேலை பார்த்த சிமெண்ட் செங்கல் தயாரிக்கும் நிறுவனத்தில் ராஜா என்பவர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறிவிட்டது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். நேற்று முன்தினம் குடிபோதையில் லட்சுமியின் வீட்டிற்கு சென்ற ராஜா அவருடன் தகராறு செய்துள்ளார். அப்போது லட்சுமியின் மகள்கள் ராஜாவை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து மீண்டும் வீட்டிற்கு வந்த ராஜா லட்சுமியை உல்லாசத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். அதற்கு லட்சுமி மறுப்பு தெரிவித்ததால் வலுக்கட்டாயமாக ராஜா அவருடன் உல்லாசத்தில் ஈடுபட முயன்றுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜாவை லட்சுமி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த ராஜா லட்சுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடியது தெரியவந்துள்ளது. அதன் பின் காவல்துறையினர் ராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.