காவல் நிலையத்திற்குள் நுழைந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் காவல் நிலையத்திற்குள் நல்ல பாம்பு ஒன்று நுழைந்தது. சிறிது நேரத்தில் அந்த பாம்பு கழிவு நீர் குழாய்க்குள் சென்றதை பார்த்து போலீசார் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1/2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழாய்க்குள் நுழைந்த பாம்பை பத்திரமாக பிடித்தனர். இதனை அடுத்து 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு காட்டு பகுதியில் விடப்பட்டது.