ஒரு காலத்தில் மிக செல்வச் செழிப்பாக இருந்த நாடு கடைசியில் அகதிகள் முகாம் ஆக மாறிய சோக சம்பவத்தை பற்றி பார்க்கலாம்.
ஆஸ்திரேலியாவுக்கு அருகில் நவுரு என்ற மிகச்சிறிய தீவு உள்ளது. அந்த நாடு 1968 ஆம் ஆண்டுக்கு முன்னர் சாதாரண நாடாக இருந்தது. அதன் பிறகு அந்த நாட்டுக்கு ஒரு பெரிய வரம் கிடைத்தது. அதாவது நவுறு தீவில் பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக இயற்கையிலேயே இருப்பதால், அங்கு வரும் பறவைகள் அனைத்தும் கழிவிரக்கம் செய்வது அங்குதான். அதன் காரணமாக அந்த கழிவுகள் பாஸ்பேட் என்னும் மிக உயரிய உரமாக மாறியது. இதனை அறிந்த மற்ற நாடுகள் நவுரு நாட்டிலுள்ள உரத்தை வாங்குவதற்கு போட்டிபோட்டுக் கொண்டிருந்தன.
அதனால் தங்கள் நாட்டின் மவுசை அறிந்துகொண்ட அந்த நாட்டினர், அந்த உரத்தை ஏற்றுமதி செய்ய தொடங்கினர். அதனால நாடு செல்வ செழிப்பு மிக்க நாடாக உருமாறியது. அந்நாட்டு மக்கள் அனைவருக்கும் கல்வி மருத்துவம் போக்குவரத்து என அனைத்து வசதிகளையும் இலவசமாக வழங்க ஆரம்பித்தது. இவ்வாறு அனைத்தும் இலவசமாகக் கிடைத்ததால் பொதுமக்கள் எவரும் வேலைக்கு செல்லாமல் சாப்பிட்டு சோம்பேறிகளாக இருந்தனர். ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்நாட்டில் பாஸ்பேட் உரம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது.
அதனால் பஞ்சத்தில் வாடிய அவர்கள் ஆஸ்திரேலியாவிடம் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து அந்த நாட்டை எடுத்துக்கொண்ட ஆஸ்திரேலியா தற்போது ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வருகின்றது. அதுமட்டுமன்றி நவுறு தீவை ஆஸ்திரேலியா நாட்டிற்கு வரும் அகதிகள் முகாம் ஆகவும் மாற்றிக்கொண்டுள்ளது. கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது, கஷ்டப்படாம கிடைக்கிறது என்னைக்குமே நிலைக்காது என்ற பழமொழியை அனைவரும் அறிந்திருப்போம். அந்த பழமொழிக்கு இந்த நாடே மிகப்பெரிய உதாரணம்.