Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கழிவுகளால் நுரையாய் பொங்கிய திருமணி முத்தாறு….அதிர்ச்சியில் மக்கள்….!!!!

சேலம் மாவட்ட திருமணிமுத்தாறில் அடிக்கடி சாயப்பட்டறை கழிவுநீர் கலந்து செல்கிறது. இதனை தடுப்பதற்காக விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இதுவே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி சேலத்தில் கன மழை பெய்தது. இதனை பயன்படுத்தி ஒரு சில சாயப்பட்டறையில் இருந்து சாயக் கழிவுகள் திருமணிமுத்தாறில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் உத்தமசோழபுரம் அருகே திருமணிமுத்தாறில் சாயக்கழிவு நீருடன் கலந்து நுங்கும், நுரையுமாக காணப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் கூறியது, மழைக்காலங்களில் ஒரு சில சாயப்பட்டறைகளில் இருந்து கழிவு நீர் மணிமுத்தாறில் திறந்து விடப்படுகிறது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.

Categories

Tech |