சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் புவனா. 37 வயதான இவர் கொரோனா காலத்தில் தனக்கு ஏற்பட்ட நான்கு லட்சம் மதிப்பிலான கடனை அடைப்பதற்காக ஜான்சன் என்பவரின் உதவியோடு குழந்தையை பராமரிக்கும் வேலை ஒன்று குவைத்தில் இருப்பதாக கூறி அங்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு சென்ற ஒரு சில நாட்களிலேயே தன்னுடைய கணவர் மற்றும் மகளுக்கு வீடியோ ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில் ஒரு பெரிய குடும்பத்திற்கு தான் வேலை செய்வதாகவும், அங்கு 20 மணி நேரம் தன்னை வேலை வாங்குவதாகவும், அடித்து அவமானப்படுத்தி கழிவறையில் படுக்க வைப்பதாகவும் வீடியோ அனுப்பியுள்ளார். இந்த நிலையில் புவனாவை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று அவருடைய மகளும், கணவரும் முத்ல்வர் ஸ்டாலினுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.