அமெரிக்காவின் அலபாமா மாகாணம் யுபாலா நகரில் உள்ள ஒரு வீட்டிற்குள் அழையா விருந்தாளியாக பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. இதைப் பார்த்து பதறிப்போன குடும்பத்தினர்கள் உடனடியாக பாம்பை அடித்து விரட்ட முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த பாம்பு அவர்களிடம் சிக்காமல் மாயமாக மறைந்துள்ளது இதனை அடுத்து அவர்கள் பாம்பு எங்கே போனது என வீடு முழுவதும் தேடியுள்ளனர். அப்போது வீட்டின் கழிவறை கோப்பைக்குள் வந்து பாம்பு பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சயடைந்துள்ளனர்.
மேலும் கழிவறை கோப்பைக்குள் இருக்கும் பாம்பை எப்படி வெளியே எடுப்பது என தெரியாமல் அவர்கள் தவித்து வந்தனர். அதன் பின் அவர்கள் போலீசை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளனர். அதன் பேரில் விரைந்து சென்ற போலீசார் உயிருடன் மீட்டு காட்டுக்குள் விட்டுள்ளனர். முன்னதாக கழிவறை கோப்பைக்குள் பாம்பு பதுங்கி இருந்ததை பார்த்து வியந்து போன போலீசார் அதை புகைப்படம் எடுத்து facebook இல் பதிவிட்டுள்ளனர் தற்போது இந்த பதிவு வைரலாக பரவி வருகிறது.