Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கழிவறைக்கு சென்ற கலைஞர்…. ஓடும் ரயிலில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த நாதஸ்வர கலைஞர் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனுமந்தபுத்தேரி பகுதியில் நாதஸ்வர கலைஞரான முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பார்வை குறைபாடு இருக்கிறது. இந்நிலையில் முத்து கிருஷ்ணன் மற்றும் அவரது நாதஸ்வர குழுவினர் திருநெல்வேலி மாவட்டத்திற்கு கச்சேரிக்காக சென்றுள்ளனர். இவர்கள் கச்சேரியை முடித்துவிட்டு ரயிலில் செங்கல்பட்டு நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யலூர் பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது முத்துகிருஷ்ணன் கழிப்பறைக்கு நடந்து சென்றுள்ளார். இதனையடுத்து திடீரென நிலைதடுமாறிய முத்துகிருஷ்ணன் ரயிலில் இருந்து கீழே விழுந்ததால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இதற்கிடையில் கழிப்பறைக்கு சென்ற முத்து கிருஷ்ணன் திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த நாதஸ்வர குழுவினர் உடனடியாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வண்டிகருப்பணசாமி கோவில் அருகில் இருக்கும் தண்டவாளத்தில் முத்துகிருஷ்ணன் சடலமாக கிடப்பது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் முத்து கிருஷ்ணனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |