Categories
உலக செய்திகள்

கழிப்பறையில் பச்சிளம் குழந்தை….. பெண் பயணிகள் தடுத்து நிறுத்தம்…. நிர்வாண பரிசோதனையால் கொந்தளித்த அரசு…!!

விமான நிலைய கழிவறையில் பச்சிளம் குழந்தை கண்டெடுக்கப்பட்டதால் சிட்னிக்கு பயணிக்க இருந்த பெண்களை நிர்வாணமாக சோதனை செய்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்டார் தலைநகரான தோஹாவில் அமைந்துள்ள ஹேமாத் விமான நிலையத்தில் ஊழியர்கள் கழிப்பறையில் பிறந்த பச்சிளம் குழந்தை கிடப்பதை கண்டு அதிர்ந்து உள்ளனர். குழந்தை யாருடையது என்பது தெரியாத நிலையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக 13 ஆஸ்திரேலிய பெண்கள் உட்பட பெண் பயணிகள் அனைவரும் ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு நிர்வாணச் சோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர்.

ஆனால் எதற்காக இந்த சோதனை என்பதை பெண்களிடம் தெரிவிக்கவில்லை. இதனால் இந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலியா கட்டார் அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. ஆனால் விமான சேவை நிறுவனத்திடம் இருந்து எந்த பதிலும் இதுவரை அளிக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

 

Categories

Tech |