Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கள்ள நோட்டுகளை அச்சடித்தது எப்படி?…. ஊட்டி உரிமையாளரிடம் விசாரணை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

சட்ட விரோதமாக கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் இயந்திரத்தை தயார் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட குற்றத்திற்காக காங்கிரஸ் கட்சி  பிரமுகர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்னையை சேர்ந்த 8 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் தாமஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அச்சடிக்கும் கடை நடத்தி வந்துள்ளார். இவர் அச்சடிக்கும் எந்திரங்களில் சில வண்ண கரைசல்களை உள்ளீடு செய்து கள்ளநோட்டு அச்சடிக்குமாறு மாற்றியமைத்துள்ளார்.

இந்த அச்சடிக்கும் இயந்திரங்களை சென்னையை சேர்ந்த ரகு, நாகூர் மீரான் ஆகியோருக்கு கொடுத்துள்ளார். இவர்கள் 2 பேரும் சேர்ந்து கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டுள்ளனர். இதேப்போன்று புதுச்சேரியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகருக்கும் தாமஸ் கள்ளநோட்டு விநியோகம் செய்துள்ளார். இவர் குறுக்குவழியில் பணம் சம்பாதிப்பதற்காக கள்ள நோட்டு அச்சடிக்கும் எந்திரங்களை தயார்செய்து கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளார். இவரை கைது செய்த காவல்துறையினர் தாமஸிடமிருந்த  இருந்த 5 அச்சடிக்கும் எந்திரங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |