அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, “கள்ள ஓட்டினால் தான் தமிழக உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றிருந்தால் 100% அதிமுக தான் வெற்றி பெற்றிருக்கும். இதுபோன்ற கள்ள ஓட்டுககளால் தான் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதோடு கள்ள ஓட்டு போட முயன்றவரை பிடித்ததற்கு தான் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பரிசு கிடைத்துள்ளது. அவர் சிறையில் அடைக்கப்பட்டதுதான் அந்த பரிசு. திமுகவிற்கு பொய் வழக்கு போடுவது ஒன்றும் புதிதல்ல.!!” இவ்வாறு அவர் கூறினார்.