சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் பாரம்பரிய முறைப்படி சனிக்கிழமை (ஏப்ரல் 16) நடைபெற இருக்கிறது. அதிகாலை 5.50 மணி முதல் 6.20 மணிக்குள் வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளுகிறார்.
இதற்காக அழகர் கோவிலிலிருந்து சுந்தரராஜ பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து வியாழக்கிழமை ஆறு முப்பது மணி அளவில் தங்கப் பல்லக்கில் புறப்பட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை மதுரையை வந்தடைந்தார்.இந்த நிகழ்ச்சியில் பக்தர்களும் ஆற்றில் இறங்குவார். இந்த நிலையில் வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதன் காரணமாக பக்தர்களுக்கு வைகை ஆற்றில் இறங்க அனுமதி இல்லை எனக் கூறியதுடன் ஆற்றின் கரையோரங்களில் என்று பக்தர்கள் தரிசனம் செய்ய மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.