மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை அறிந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கோனேரிப்பட்டி கட்டுக்கொட்டாய் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரேவதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் ரேவதி வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மணிகண்டன் பலமுறை கண்டித்தும் ரேவதி பேச்சை கேக்காமல் அந்த நபருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
இதனால் மணிகண்டன் மனமுடைந்து வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மணிகண்டனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மணிகண்டனின் தாயார் பெருமாயி ராசிபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.