Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய இருந்த மூன்றரை டன் ரேஷன் அரிசி”… போலீசார் அதிரடி…!!!

கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக லாரியில் ஏற்றிக் கொண்டிருந்த ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை சப்-இன்ஸ்பெக்டர் வேம்பு தலைமையிலான போலீசார் திருமையம் தாலுகா கல்லூர் பகுதியில் ரோந்து பணியில் இருக்கும் பொழுது அப்போது அங்கு ஒரு லாரி ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் விற்பதற்காக ஏற்றிக் கொண்டு இருந்தனர்.

இதனை போலீசார் பார்த்ததையடுத்து லாரியுடன் மூன்றரை டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தார்கள். கடத்த முயன்றவர்கள் தெக்கூர் மேல தெருவைச் சேர்ந்த செல்வி, செல்வம், சதீஷ்குமார் மற்றும் லாரி டிரைவர் வேல் பாபு உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தார்கள். மேலும் இவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Categories

Tech |