கூவாகம் கிராமத்தில் சித்திரை திருவிழா நேற்று தொடங்கி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் புகழ்வாய்ந்த கூத்தாண்டவர் கோவிலில் வருடம் தோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கமாக கொண்டுள்ளனர். இத்திருவிழாவில் தமிழகத்தில் உள்ள திருநங்கைகள் மட்டுமன்றி மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து பெரும்பாலான திருநங்கைகள் வந்து பங்கேற்று சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியானது நேற்று தொடங்கி உள்ளது. இதை முன்னிட்டு அங்குள்ள மக்கள் கூழை வீட்டில் தயார் செய்து சாமிக்கு படைக்கப்பட்டு பிரசாதமாக அளித்தனர். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மட்டுமல்லாமல் திருநங்கைகளும் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்கள். வருகின்ற 19ஆம் தேதி சுவாமி திருக்கண் திறப்பு மற்றும் திருநங்கைகளுக்கு தாலி கட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெறுகின்றது. இதைத் தொடர்ந்து 20 ஆம் தேதி தேரோட்டம் நடைபெற இருக்கின்றது.மேலும் 22 ஆம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா முடிவடையும். இரண்டு வருடங்களாக இத்திருவிழா நடத்தப்படாத நிலையில் தற்போது நடத்தப்படுவதால் பொதுமக்கள் மற்றும் திருநங்கைகள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.