கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள கனியமூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்ம முறையில் உயிரிழந்த விவகாரம் பரவி வருகிறது. இது சமூகவலைதளத்தில் justice for srimathi என்ற ஹஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இந்த சம்பவம் நடந்த அன்று நள்ளிரவில் பள்ளியில் மர்ம நபர் ஒருவர் நடந்து செல்வது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து விசாரணை செய்தபோது, அந்த வீடியோ சேலம் மாவட்ட வாளபடி போலீஸ் நிலையம் சிங்கபுரம் அரசு பள்ளியில் உள்ள மடிக்கணினியை திருட முயற்சி செய்த சம்பவம் குறித்து சிசிடிவி வீடியோ என்று தெரிய வந்தது. இந்த சம்பவத்தை வேறு விதமாக திசை திருப்பி கனியாமூர் சக்தி பள்ளியில் நடந்த சம்பவத்தோடு தொடர்புபடுத்தி போய் செய்தியை மக்கள் மத்தியில் பரப்பி கிளர்ச்சியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் செயல்பட்டு வருகின்றனர். அதனைப் போல சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் செல்வகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.