Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி சம்பவம்….. கலவரம் நடக்க இதுதான் காரணம்….. அதிகாரி சொன்ன முக்கிய தகவல்….!!!!

தனியார் பள்ளியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 17 வயதான ஸ்ரீமதி விடுதியில் தங்கி படித்து வந்தார். இவர் கடந்த 13ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் மரணம் தொடர்பாக கடந்த 17ஆம் தேதி நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. பள்ளி பேருந்துகள், போலீஸ் வாகனங்கள், பள்ளியில் உள்ள பொருட்கள் அனைத்தையும் கலவரக்காரர்கள் அடித்து நொறுக்கினர். கலவரத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

அதன் பிறகு தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. நேற்று டிஜிபி பிரவீன் குமார் அபினவ் தலைமையிலான குழு பள்ளியில் ஆய்வு மேற்கொண்டது. இதில் கலவரக்காரர்கள் சேதப்படுத்திய பள்ளி கட்டிடம், வகுப்பறைகள், தீயிட்டுக் கொளுத்திய பேருந்துகள் அனைத்தையும் அவர் பார்வையிட்டார். அதன் பிறகு அதிகாரி ஒருவர் கூறியதாவது: “பள்ளியை சேதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே கலவரக்காரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக மாணவியின் இறப்பிற்கு நீதி கேட்பது போன்று போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.

இதற்கு முழு காரணம் பள்ளியின் தாளாளர் மீதான வெறுப்பு தான். பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் அதிக கடனிலிருந்துள்ளார். இதனால் கல்வி கட்டணத்தை கராராக வசூல் செய்து வந்துள்ளார். எந்த அமைப்பாக இருந்தாலும் , அரசியல் கட்சியாக இருந்தாலும் நன்கொடை தர மறுத்துள்ளார்.  இதனால் அவர் மீது பலரும் மிகுந்த கோபத்தில் இருந்துள்ளனர். தனது தாயார் சிறிய அளவில் தொடங்கிய பள்ளியை தாளாளர் ரவிக்குமார் கடன் பெற்று விரிவு படுத்தியுள்ளார்.

மேலும், அரசியல் கட்சியினரிடமும் பகையை சம்பாதித்துள்ளார். இப்படி பல்வேறு தரப்பினருடைய ரவிக்குமார் எதிர்ப்பை சம்பாதித்தது தான் இந்த கலவரத்திற்கு காரணம். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றது. மாணவி மரணம் குறித்த விசாரணையும் பல்வேறு கோணங்களில் நடந்து வருகின்றது. தவறு செய்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |