கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி மர்ம மரணம் விவகாரத்தில் நேற்று முன்தினம் போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடினர். இந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி கலவரத்தில் சான்றிதழ்களை இழந்த பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக நடந்த கலவரத்தில் மாணவர்களின் சான்றிதழ்கள் எரிக்கப்பட்டன. இந்நிலையில் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ்கள் மட்டுமின்றி பிறப்புச் சான்றிதழ் உட்பட பல சான்றிதழ்கள் வருவாய் துறை மூலம் விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.