கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள பள்ளியில் விடுதியில் தங்கி படித்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு சம்பவம் அரங்கேறியது. கடந்த 17ஆம் தேதி கனியாமூரில் உள்ள சக்தி பள்ளியை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கி சூறையாடினர். அந்த பள்ளியில் இருந்த வாகனங்கள் அனைத்தும் தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும் கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பள்ளியில் பாடங்கள் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் அருகில் உள்ள பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்பட்டது.
ந்நிலையில், அந்த பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் அறிவித்துள்ளார். பள்ளி கட்டடங்கள் சீரமைப்புக்கு பின் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும். மேலும், மாணவர்களின் எரிந்த சான்றிதழ்களின் நகல்களை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.