புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர்.கிருஷ்ணசாமி நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சட்டம்-ஒழுங்கு மீது நம்பிக்கையை இழந்த பிறகு தான் மக்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே இதற்கு தி.மு.க. அரசு தான் பொறுப்பு.
தி.மு.க. 500 வாக்குறுதிகளை அளித்தது. அதில் 5 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. ஆட்சி பொறுப்பேற்று 15 மாதங்களுக்கு பிறகும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளது. இது பாராளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.