கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கல்லூரி மாணவியை திருமணம் செய்த தொடர்பான வழக்கில் மாணவி சௌந்தர்யா கணவர் பிரபுயுடன் செல்ல சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எ.ல்.ஏ திரு. பிரபு தியாகத் துர்க்கத்தை சேர்ந்த சுவாமிநாதன் என்பவரின் மகள் சௌந்தர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சௌந்தர்யாவின் காதலை பெற்றோர் ஏற்காததால் அவரை வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். இதை கண்டித்து சௌந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் இருவரும் காதலித்ததாகவும் சௌந்தர்யாவின் பெற்றோர் சம்மதிக்காததால் தமது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாகவும் எம்.எல்.ஏ பிரபு மனைவியுடன் சேர்ந்து காணொளி வெளியிட்டார்.
இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏ பிரபுவால் கடத்தப்பட்ட தன் மகளை மீட்டு தரக்கோரி தந்தை சுவாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் அமர்வில் மனு விசாரணைக்கு வந்தது. அப்போதே எம்.எல்.ஏ பிரபு-வின் மனைவி சௌந்தர்யா அவரது தந்தை சுவாமிநாதன் இருவரும் நேரில் ஆஜராகினர். தந்தை மற்றும் மகளின் கருத்தை கேட்ட நீதிபதிகள் இருவரையும் தனியாக கலந்து பேசி இறுதி முடிவை தெரிவிக்க அவகாசம் வழங்கினார். அப்போது கணவருடன் செல்ல சௌந்தர்யா விருப்பம் தெரிவித்ததை அடுத்து எம்.எல்.ஏ பிரபுவிடம் செல்ல அனுமதி வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்தனர் வைத்தனர்.