கள்ளக்குறிச்சி எம்எல்ஏ காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணையும் அவரது தந்தையையும் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏவாக இருந்து வரும் பிரபு கடந்த சில நாட்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அவர் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் அப்பா பிரபு தன் பெண்ணை கடத்தி திருமணம் செய்துகொண்டதாக ஆட்கொணர்வு மனு ஒன்றை அளித்தார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் என் மகளை கடத்திச் சென்று வற்புறுத்தலின் பெயரில் திருமணம் செய்து கொண்டதாக அவர் மனுவில் தெரிவித்துள்ளார் .
மேலும் இதுகுறித்து பல முறை காவல்துறையிடம் தெரிவித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், என் மகளை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இந்த வழக்கு இரண்டு நாட்களாக பட்டியலிடபடாத நிலையில் இன்று அவசர வழக்காக எடுத்து விசாரணை செய்யப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் சௌந்தர்யாவையும் ,அவரது தந்தையையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.