கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள கோவிந்தசாமிபுரத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். அந்த மாணவியின் வீட்டின் அருகே அலமேலு என்பவர் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு உறவினரான விஜய் என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கும் மாணவிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த விஷயம் விஜய்யின் அத்தை அலமேலுக்கு தெரிய வர தனது கணவர் மற்றும் மகனுடன் மாணவியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு மூவரும் மாணவியின் குடும்பத்தாருடன் தகராறு செய்ய மனம் உடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் மாணவியின் தற்கொலைக்கு காதல் விவகாரம் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது. காதலரின் குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.