Categories
தேசிய செய்திகள்

கள்ளக்காதலை கண்டித்த கணவன்… “பெட்ரோல் ஊற்றி கொளுத்தி, தலையில் கல்லை போட்டு”… துடிக்கத் துடிக்க கொன்ற மனைவி…!!!

மனைவியின் கள்ளக்காதலை கண்டித்ததால், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீயிட்டுக் கொளுத்திவிட்டு மனைவி தலைமறைவாகியுள்ளார்.

கர்நாடகா மாநிலம், ஜெயநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்தவர் நாராயணா. இவரின் மனைவி அன்னபூர்ணா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. நாராயணன் தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் வீட்டிற்கு வருவது வழக்கம். இந்நிலையில் அன்னபூர்ணாவுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணா என்பவருக்கும் இடையில் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

ஒருகட்டத்தில் நாராயணருக்கு இது தெரியவரவே, மனைவியின் கள்ளத்தொடர்பை விடும்படி அவரிடம் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த தினத்தன்றும் இந்த இருவருக்கும் இந்த விவகாரம் தொடர்பாக சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மனைவி அன்னபூரணா, ராமகிருஷ்ணாவை வீட்டிற்கு வரும்படி அழைத்து நாராயணனின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார். அவர் அலறி அடித்துக் கொண்டு வீட்டிற்கு வெளியில் செல்லவே, அங்கிருந்த சாக்கடை கால்வாயில் தவறி விழுந்துள்ளார்.

அப்போது ராமகிருஷ்ணா பெரிய கல் ஒன்றை எடுத்து நாராயணனின் தலையில் போட்டு கொலை செய்துள்ளார். பலத்தகாயம் அடைந்தும், உடல் எரிந்த நிலையிலும் பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதையடுத்து அன்னபூரணாவும், ராமகிருஷ்ணனும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் காவல்துறையினர் தலைமறைவாக உள்ள கள்ளக்காதல் ஜோடிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |