சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே)யின் தோல்வியால் வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு ஆறுதலாக டோனியின் மனைவி கவிதையை பதிவிட்டுள்ளார்.
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை நேற்று சென்னை அணி வீழ்த்தியதை அடுத்து, மற்ற அணிகளின் முடிவுகளை வைத்து, பிளே ஆப் வாய்ப்பு சிஎஸ்கே அணிக்கு ஓரளவு இருந்தது. ஆனால் அதன் பிறகு நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்று ரன்ரேட்டையும் பலமாக வைத்ததால் சென்னை அணியின் பிளே ஆப் கனவு தகர்ந்தது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் சிஎஸ்கே கேப்டன் டோனியின் மனைவி சாக்சி, சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கவிதையை பதிவிட்டுள்ளார்.
அதில், ‘இது வெறும் விளையாட்டு தான்… சில போட்டிகளில் வெற்றி கிட்டும், சில போட்டிகளில் தோல்வி கிட்டும், யாரும் தோல்வியை விரும்புவதில்லை, ஆனால் எல்லோரும் வெற்றியாளர்களாகவே இருக்க முடியாது. உண்மையான வீரர்கள் மட்டுமே போராட பிறக்கிறார்கள். அவர்கள் எப்போதுமே நம் இதயத்திலும், மனதிலும் சூப்பர் கிங்ஸ்-களாக இருப்பார்கள்’ என ஆறுதலாக கூறியிருக்கிறார். சிஎஸ்கே தனது டுவிட்டர் பக்கத்தில் சாக்சியின் இந்த பதிவை ஷேர் செய்துள்ளது.