உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உதவி தொகை திட்டத்திற்கான வழிமுறைகளை உயர்கல்வித்துறை வெளியிட்டிருந்தது. தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், உயர்கல்வி உறுதி திட்ட மாற்றப்பட்டதாக அறிவித்தார். அதன்படி உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு,மாதம் ரூ.1000 வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
யாருக்கெல்லாம் கிடைக்கும் :
6 முதல் 12ம் வகுப்பு வரை தமிழகத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து தமிழகத்திலேயே உயர்கல்வி படிப்பவராக இருக்க வேண்டும்.
இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடித்திருக்க வேண்டும். உயர்கல்வி படிப்பதற்கு மாணவ மாணவியர்களுக்கு மாதம் ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
அதே சமயம்,2022-23 ஆம் கல்வியாண்டில் மேற்படிப்பில் புதிதாக சேர்ந்த மாணவிகளும் இத்திட்டத்திற்கு https://penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
கல்லூரிகளில் முதலாமாண்டு முடித்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவிகளும்,2 ஆம் ஆண்டிலிருந்து 3 ஆம் ஆண்டு செல்லும் மாணவிகளும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் .
மேலும் இந்த திட்டம் குறித்து அறிவதற்கு 14417 என்ற எண்ணை தொடர்பு கொண்டு கேட்கலாம்.
யாருக்கெல்லாம் கிடைக்காது:
மாணவர்கள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தால் இந்த உதவி திட்டத்தில் உதவி தொகை கிடைக்காது.
தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு ரூபாய் 1000 திட்டம் பொருந்தாது.
2022 23 ஆம் கல்வியாண்டில் புதிதாக மேற்படிப்பில் சேர்ந்த மாணவிகள், கல்லூரி இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவிகள் இதில் விண்ணப்பிக்கலாம்.
2021-22ஆம் ஆண்டு இறுதியாண்டு பயிலும் மாணவிகள் இந்த திட்டத்தில் பயனடைய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.