ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குனர் சேது ராம வர்மா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரக திறனாய்வுத் தேர்வுத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான ஊரக திறனாய்வு தேர்வு ஜனவரி 30ஆம் தேதி நடத்தப்பட இருந்தது இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரி பல்வேறு கோரிக்கைகள் வந்ததையடுத்து மாணவர்களின் நலன் கருதி ஊரகத் திறனாய்வு தேர்வு பிப்ரவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது இந்த தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் ஜனவரி 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் c’mon அவர்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர்கள் ஜனவரி 20-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தலைமை ஆசிரியர்கள் செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
Categories
கல்வி உதவித்தொகை பெற…. ஊரகத் திறனாய்வு தேர்வு…. கால அவகாசம் நீட்டிப்பு…!!!!
