தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக சென்ற 2 வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பெரும்பாலானோர் தங்களது கல்வியை விட்டு பொருளாதார நெருக்கடியினால் வேலைக்கு சென்றனர். இதனால் மாணவர்கள் தங்களது கல்வி படிப்பின் இடை நிற்றலை தவிர்ப்பதற்காக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இப்போது மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசால் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் தற்போது அரசு பள்ளிகளில் படிக்கும் உயர்கல்வியில் சேரும் மாணவியர்களுக்கு ரூபாய் 1000 உதவித்தொகை ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் படித்து கொண்டிருக்கும் 3 முதல் 5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூபாய் 500 கல்வி உதவித்தொகை வழங்கப்படும் எனவும் 6ஆம் வகுப்பு மாணவியருக்கு ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முழுநேர முனைவர் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் தமிழகத்தை சார்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் உள்ளிட்டவர்களுக்கு வருடத்திற்கு ரூபாய் 1,00,000 வரை வழங்கப்படும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த திட்டத்தில் இணைவதற்கான தகுதிகள் குறித்து விரிவாக தெரிந்து கொள்வோம். இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு ஆண்டு வருமானம் ரூபாய் 8 லட்சம் பெறுபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
மேலும் இதில் முழுநேர முனைவர் பட்டப்படிப்பு மேற்கொள்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆனால் பகுதிநேர முனைவர் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு இது வழங்கப்பட மாட்டாது. அதுமட்டுமின்றி முதுகலை பட்டப்படிப்பில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். அதனை தொடர்ந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை ஆணையர், ஆதிதிராவிடர் நலத்துறை, சேப்பாக்கம், சென்னை- 600005 என்ற முகவரிக்கு வரும் ஜூன் 10ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இது குறித்த கூடுதல் தகவல்களை பெறுவதற்கு https://drive.google.com/file/d/1crrX45s7YQ90xTT6sCuc-MP-ra3P72G6/view என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.