கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் செட்டி தோட்டம் பகுதியில் ஜானகி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி(19) என்ற மகளும், பாபு என்ற மகனும் இருக்கின்றனர். இதில் செல்வி பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பாபு அம்பத்தூரில் இருக்கும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை அனைவரும் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்து செல்வி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனை அடுத்து செல்வி எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் தனக்கு வாழ்க்கை வெறுத்து விட்டதாகவும், வாழ பிடிக்கவில்லை என்பதால் தற்கொலை செய்து கொள்வதாகவும் செல்வி எழுதியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் செல்வி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.