Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களே…. “தேர்வு கட்டாயம்” விரைவில் அட்டவணை வெளியீடு…. அமைச்சர் அறிவிப்பு….!!

இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். 

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு தொடர்ந்து நடைமுறையில் இருப்பதால், பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் கடந்த மாதங்களில் படிப்படியாக ரத்து செய்யப்பட்டு வந்தது. அதை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பாக கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இறுதி செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், விரைவில் இறுதி செமஸ்டர் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடப்பட்டு தமிழகத்தில் தேர்வு நடத்தப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பி அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தலாமா? என்பது குறித்து துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தி அரசு முடிவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 

Categories

Tech |