Categories
தேசிய செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு ஜூலை 1 முதல் 16ம் வரை கோடை விடுமுறை…. மாநில அரசு அறிவிப்பு வெளியீடு…!!!!!

கொரோனா  மூன்றாம் அலை தாக்குதலுக்கு பின் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு இந்த ஆண்டு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. நீண்ட நாட்கள் பள்ளி மூடப்பட்டிருந்ததால் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இந்த கற்றல் இடைவெளியை  ஈடுசெய்ய மாநில பொதுப்  பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் கோடை விடுமுறையை குறைக்க ஒடிசா அரசு முடிவு செய்து இருக்கிறது.

இந்நிலையில் மாநில அரசு பல்கலைக்கழகங்கள் அரசு மற்றும் அரசு சாரா சட்ட கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் உயர்கல்வித் துறை முதன்மை செயலர் சாஸ்வத்  மிஸ்ரா,ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 16ஆம் தேதி வரை மட்டும் விடுமுறை அளிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார். முன்னதாக கோடை விடுமுறை சுமார் 45 நாட்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கோடை விடுமுறை குறைக்கப்பட்டதன் மூலமாக, உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் சரியான நேரத்தில் முடிக்க வேண்டும், தேவைப்பட்டால், கூடுதல் வகுப்புகள் விடுமுறை நாட்களிலும், வேலை நாட்களிலும் போதனை நேரத்தைத் தகுந்தவாறு நீட்டித்து நடத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கோடை விடுமுறையைக் குறைப்பதற்குப் பதிலாக கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு இப்போது கூடுதல் விகிதாசார ஊதிய விடுப்புக்கு உரிமை உண்டு என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பள்ளி மற்றும் வெகுஜனக் கல்வித் துறை பள்ளிகளுக்கு கோடை விடுமுறையைக் குறைத்து அறிவித்தது. பள்ளிகளுக்கு ஜூன் 6 முதல் ஜூன் 16 வரை விடுமுறை அளிக்கப்படும். வழக்கமாக, அம்மாநிலத்தில் பள்ளி விடுமுறை 50 நாட்களுக்கு இருக்கும். ஆனால், அது இம்முறை வெறும் 10 நாட்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடு செய்யும் வகையில் அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு குறைவான கோடை விடுமுறையை அளிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக கூறபட்டுள்ளது.

Categories

Tech |