தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளின் ஆன்லைன் மூலம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் ஜூன், ஜூலை மாதம் நடைபெறும் அரியர் தேர்வுகள் கலந்துகொண்டு எழுதலாம். மேலும் நடப்பு பருவங்களான 2,4,6 ஆம் பருவ மாணவர்களுக்கான தேர்வுகள் வருகின்ற ஜூன் 14ஆம் தேதி முதல் ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறும். இதற்கான தேர்வு கட்டணத்தை வரும் 4 ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை செலுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.