கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் குறைந்தபட்சம் 450 மணிநேரம் இன்டர்ன்ஷிப் செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு முடிவெடுத்துள்ளது. மாணவர்கள் இரண்டு வகையான ஆய்வு பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அதாவது ஆய்வு மனப்பான்மையை வளர்க்கவோ, தங்களுடைய வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவோ மாணவர்கள் இந்த பயிற்சியை பயன்படுத்திக்கொள்ளலாம்
* நான்கு வருட காலம் இளங்கலை படிக்கும் மாணவர்கள் சுமார் 20 கிரெடிட்டுகளை பெறுவதற்கான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். டிப்ளமோ பட்டம் அல்லது சான்றிதழ் படிப்புடன் வெளியேறும் மாணவர்கள் நான்காவது செமஸ்டர் (அல்லது) இரண்டாவது செமஸ்டரில் 8 முதல் 10 வார பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
* அதேபோல் நான்காவது அல்லது இரண்டாவது செமஸ்டர் தேர்வுக்கு பிறகு பட்டப் படிப்பை முடிக்கும் மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் ஆய்வு பயிற்சியை எடுத்துக்கொள்ளலாம். இவர்கள் ஆய்வு நிறுவனங்கள் அல்லது உயர்கல்வி நிறுவனங்கள் அல்லது மேம்பாட்டு ஆய்வகங்கள் அல்லது தொழில்துறை ஆராய்ச்சிகளில் ஆய்வு பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
* நான்கு வருட காலம் பட்டப்படிப்பு மாணவர்கள் 450 மணி நேரம் ஆய்வு பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
* தன்னுடைய பயிற்சி காலத்தில் ஒவ்வொரு ஆய்வு பயிற்சியாளரும் 450 மணி நேர ஆய்வு பணியை மேற்கொள்ள வேண்டும்.
* ஆய்வு பயிற்சியை மாணவர்கள் வேறு உயர்கல்வி நிறுவனங்களிலும், தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களிலும் மேற்கொள்ளலாம். இந்த பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்காக ஆய்வு மேற்பார்வையாளரும் நியமிக்கப்படுவார்.