Categories
மாநில செய்திகள்

“போடு ரகிட ரகிட”…. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு…. சற்றுமுன் அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதுமட்டுமல்லாமல் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. ஆனால் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன.

தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 1 தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. ஆனால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதால் ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சற்றுமுன் அறிவித்துள்ளார். ஆன்லைன் தேர்வு முறையில் தவறுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |