தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு தகுதி உடைய மாணவர்கள் இன்று முதல் என்ற www.tngasa.in, www.tngasa.org இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பங்கள் பதிவு செய்ய ஜூலை 7ஆம் தேதி கடைசி நாளாகும். ஏற்கனவே ஜூன் 27-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முன்கூட்டியே இந்த விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. எனவே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories
கல்லூரி சேர்க்கை: விண்ணப்ப தேதி மாற்றம்….. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…..!!!!
