சென்னை உயர்நீதிமன்றத்தில் திருச்சியை சேர்ந்த, முன்னாள் இணை பேராசிரியர் பாண்டியன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். அந்த மனுவில் காலியிடங்களை அறிவிக்காமல் விண்ணப்பங்களை வரவேற்கும் இட ஒதுக்கீடு கொள்கையை பின்பற்றாமல் நேர்முக தேர்வுக்கு அழைப்பு விடுத்து வெளியிடப்பட்ட விளம்பரம் சட்டவிரோதமானது.
மேலும் இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறியிருப்பது, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. ஆகையால் தேர்வு மற்றும் நியமன நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. முன்னதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில், சென்னை கொளத்தூரில் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு அக்டோபர் 18ஆம் தேதி நேர்முகத் தேர்வு நடக்க உள்ளதாகவும், தகுதியானவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும், அழைப்பு விடுத்து அக்டோபர் 13ஆம் தேதி விளம்பரம் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ராஜா பாரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு பிளீடர் பி.முத்து குமார் ஆஜராகி அக்டோபர் 18ஆம் தேதி நேர்முகத் தேர்வு முடிந்தது. மேலும் அக்டோபர் 22 ஆம் தேதி பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டுவிட்டன என்று குறிப்பிட்டார். இதை பதிவு செய்த நீதிபதிகள் காலதாமதமாக வழக்கு தொடர்ந்து கூறி வழக்கை தள்ளுபடி செய்து ஆணையிட்டுள்ளார்.