Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“கல்லூரியில் படிக்கும் போது திருநங்கையாக மாற்றம்”….. படிப்பை தொடர கல்லூரி நிர்வாகம் மறுப்பு…. ஆட்சியர் அதிரடி….!!!!!

கல்லுரையில் படிக்கும் பொழுது திருநங்கையாக மாறியதால் கல்லூரி நிர்வாகம் படிப்பை தொடர மறுத்ததால் ஆட்சியர் அரசு கல்லூரியில் இடம் ஒதுக்கி ஆணை வழங்கியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள செங்குன்றத்தைச் சேர்ந்த லோகேஷ் என்பவர் சென்ற 2018-19 ஆம் கல்வியாண்டில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்தார். ஆனால் அவர் படிக்கும் பொழுது திருநங்கையாக மாறியதால் கல்லூரி நிர்வாகம் அவர் இரண்டாம் வருடம் படிப்பதற்கு மறுத்தது. இதனால் அவர் படிப்பை பாதியில் நிறுத்தினார்.

பின் கொரோனா காரணமாக கல்லூரி படிப்பை படிக்க இயலாத நிலை ஏற்பட்டது. இதை அடுத்து 2022-23ஆம் வருடத்தில் பட்டப் படிப்பு படிக்க ஆசைப்பட்ட லோகேஷ் ஓவியா என பெயர் மாற்றம் செய்து பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரியில் சேர விண்ணப்பித்தார். ஆனால் திருநங்கைகளுக்கான இட ஒதுக்கீட்டில் சேர நிர்ணயம் செய்த வயதை விட ஐந்து நாட்கள் அதிகமாக இருப்பதால் சரியான வயது இல்லை எனக் கூறி நிராகரித்ததாக சொல்லப்படுகின்றது.

இதனால் ஓவியா மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து கோரிக்கை மனு அளித்திருக்கின்றார். அதன் பேரில் ஆட்சியர் பட்டப்படிப்பு படிக்க ஏற்பாடு செய்தார். ஓவியாவிற்கு உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரியில் பிஎஸ்சி கணிதவியல் படிக்க இட ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Categories

Tech |