Categories
தேசிய செய்திகள்

கல்லூரியில் நீடித்த ரேக்கிங் பிரச்சனை!… பெண் போலீஸ் கான்ஸ்டபிள் போட்ட பலே பிளான்…. மாட்டி கொண்ட 11 பேர்…. அதிரடி சம்பவம்….!!!!

இந்தூரில் உள்ள எம்ஜிஎம் மருத்துவக் கல்லூரியில் நடப்பாண்டு ஜூலை மாதத்தில் இருந்து சீனியர்கள் ஜூனியர்களை ரேக்கிங் செய்வதும், அசிங்கமாக திட்டுவதுமான நிலை தொடர்ந்து வந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக சீனியர்கள் அவர்கள் தங்கி இருக்கும் பிளாட்டிற்கே ஜூனியர்களை அழைத்து ரேக்கிங் செய்து வந்துள்ளனர். அதுமட்டுமின்றி வாட்ஸ் அப்பில் மோசமாகவும் பேசி இருக்கின்றனர். கடந்த 5 மாதங்களாக இது குறித்து புகார்கள் எழுந்து வந்தது.

இதையடுத்து காவல்துறையினர் ரேக்கிங் செய்யும் மாணவர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் ரேக்கிங்கில் ஈடுபடும் மாணவர்களை பிடிப்பது காவல்துறையினருக்கு சவாலாக இருந்தது. இந்நிலையில் 24 வயதான ஷாலினி சவுகான் என்ற இளம் கான்ஸ்டபிள் குற்றத்தில் ஈடுபடும் சீனர்களை பிடிக்க மருத்துவக் கல்லூரி மாணவியாகவே களத்தில் இறங்கியுள்ளார். இதையடுத்து ரேக்கிங் செய்யும் சீனியர்களை மடக்கி பிடிக்க ப்ரஷர் போல் நடித்து அண்டர்கவர் ஆபரேஷனில் ஈடுபட்டு 11 பேரை அந்த பெண் போலீஸ் கான்ஸ்டபிள் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

Categories

Tech |