கல்லூரிகளில் தேர்வு கட்டணம் திடீர் என இரு மடங்கு உயர்த்தப்பட்டு இருப்பதால் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியா முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் கொரனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியதன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. இதற்கிடையே கொரோனா பரவல் குறைய தொடங்கியதன் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு கடந்த நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. இதற்கிடையில் உருமாறிய கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய் பரவல் தீவிரமடைந்ததால் காரணமாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் கடந்த 24ஆம் தேதியும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் கடந்த மாதம் 13ம் தேதியும் நேரடி வகுப்புகள் தடை செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்பட்டது. மேலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வெள்ளி, சனி ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்கள் அடைப்பு என திடீர் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது தொற்று ஓரளவு குறைந்தது தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிரடியாக விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் நடப்பாண்டிற்கான மாணவர்களின் தேர்வு கட்டணத்தை உயர்த்தி பல்கலைக்கழகம் அரசாணை வெளியிட்டு இருக்கிறது. இதில் தேர்வு கட்டணம் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு இரண்டு மடங்கு கூடுதலாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகம் தேர்வு கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.
இந்நிலையில் பழைய தேர்வு கட்டணத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மண்னை ராஜகோபால சுவாமி அரசினர் கலைக்கல்லூரியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் பின்னர் கல்லூரி வளாகத்தில் இரண்டாவது நாளாக கண்டன முழக்கம் எழுப்பி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.