Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு செல்லுமாறு தந்தை திட்டியதால்…. மாணவர் தற்கொலை…. அரியலூரில் பரபரப்பு…!!

கல்லூரிக்கு செல்லுமாறு தந்தை திட்டியதால் விஷம்குடித்து மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் அருகே விக்கிரமங்கலத்தைச் சேர்ந்தவர் செந்தில்வேல். இவரது மகனாகிய  செல்வகுமார் குரும்பலூர் அரசு கலை கல்லூரியில் இளங்கலை  இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வகுமார் கடந்த சில தினங்களாக கல்லூரிக்கு செல்லாமல் ஊரை சுற்றி வந்துள்ளார். இதனால் கோபமடைந்த செந்தில்வேல் கல்லூரிக்கு செல்லுமாறு செல்வகுமாரை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த செல்வகுமார் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விவசாய நிலத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தை குடித்து வீட்டில் மயங்கி கிடந்துள்ளார்.

இதையறிந்த அக்கம் பக்கத்தினர் செல்வகுமாரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதன் பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால்  அங்கு சிகிச்சை பலனின்றி செல்வகுமார் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து விக்கிரமங்கலம் காவல்நிலையத்தில் செந்தில்வேல் கொடுத்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |