Categories
தேசிய செய்திகள்

கல்லூரிகள் திறப்பதெல்லாம் சரி…. இதை கண்டிப்பா செய்யணும்…. யுஜிசி விதித்த கட்டுப்பாடு…!!

கல்லூரிகள் திறக்கப்பட்டால் விடுதிகளில் ஒரு மாணவர் ஒரு அறையில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளது

கல்லூரிகள் திறப்பது குறித்து பல்கலைக்கழகத்தின் மானியக்குழு அறிவித்திருக்கும் கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாணவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கக் கூடும் என்ற காரணத்தினால் விடுதிகளில் இருக்கும் மாணவர்களுக்கு தனித்தனியாக அறை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதாவது கல்லூரிகள் திறக்கப்பட்டு விடுதிகளில் தங்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒவ்வொரு அறை கொடுக்க வேண்டும். கல்லூரிகள் திறந்த பிறகு 14 நாட்கள் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும். கொரோனா இல்லை என உறுதியான பிறகும் அவர்கள் தனிமைப்படுத்துதலை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது

Categories

Tech |