Categories
மாநில செய்திகள்

கல்லூரிகளில் எந்தெந்த நாட்களில்…. யார் யாருக்கு வகுப்புகள் நடைபெறும்…? வெளியான தகவல்…!!!

தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையில் பாதிப்பு சற்று குறைந்துள்ளதால் செப்டம்பர் 1 முதல் கல்லூரிகள் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் வாரத்தில் 6 நாட்களும் கல்லூரிகள் செயல்படும் என்றும், சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதுகலை, முதுநிலை 2ம் ஆண்டு மாணவர்களுக்கு வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகள். , கலை, அறிவியல், பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு 6 நாட்களும் வகுப்புகளும், 2ஆம் ஆண்டு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளியில் வகுப்புகளும், 3ம் ஆண்டு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன், சனியில் வகுப்புகளும் சுழற்சி முறையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |