ஒரு வாரமாக வீட்டிலேயே இறந்து கிடந்த மூதாட்டியின் அழகிய உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு அருகே இருக்கும் பல்லுளிப் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய மூதாட்டியை திருமணம் ஆகாமல் தனியாக வசித்து வந்துள்ளார். இவர் வீட்டு வேலை செய்துவந்த நிலையில் 100 நாள் வேலை திட்டத்திலும் சேர்ந்து வேலை செய்து இருக்கின்றார். இவர் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் வந்ததால் ஊராட்சி மன்ற தலைவர் இவருக்கு பொன்னாடை வழங்கி கவுரவித்திருக்கின்றார்.
இந்நிலையில் மூதாட்டியிடம் வேலைக்குச் செல்லும் இடங்களில் நீ இறந்தால் உன்னை யார் அடக்கம் செய்வார்கள் என கேட்டு கிண்டல் செய்ததால் ரோசி தனது வீட்டின் அருகிலேயே கல்லறை ஒன்றை கட்டி வைத்திருக்கின்றார். இந்நிலையில் சென்ற ஒரு வாரமாக மூதாட்டி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்திருக்கின்றார்.
இவரை பார்த்துக் கொள்ள யாரும் இல்லாததால் வீட்டிலேயே இறந்து கிடந்துள்ளார். மூதாட்டி ஒரு வாரமாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்ததால் மூதாட்டியின் அக்காள் மகன் வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது மூதாட்டி அழுகிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் போலீசார் அங்கு வந்து மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். பிரேத பரிசோதனை செய்தபின் உறவினர்களிடம் அவரின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் கட்டி வைத்திருந்த கல்லறையில் உடலை அடக்கம் செய்தார்கள்.