Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கல்லணையின் அழகை பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள்…. விடுமுறையை முன்னிட்டு குவிந்த கூட்டம்….!!!

விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்லணை அமைந்துள்ளது. இங்கு நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இவர்கள் கொள்ளிடம், வெண்ணாறு மற்றும் காவிரி போன்றவைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் அழகை பார்த்து ரசித்தனர். அதோடு கல்லணையில் உள்ள தண்ணீரை பார்த்து ரசித்த பொதுமக்கள், கரிகாலன் மணிமண்டபம், கரிகாலன் மண்டபம், கரிகாலன் பூங்கா போன்றவற்றையும் பார்த்து ரசித்தனர்.

இதனையடுத்து சிறுவர் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு விளையாட்டு சாதனங்களில்  குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் அனைத்து ஆறுகளில் இருந்தும் நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டதால், சுற்றுலா பயணிகள் யாரும் குளிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.

Categories

Tech |