ஆந்திராவில் ஏழை எளியோருக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கும் கல்யாணம் மஸ்து திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. ஏழை எளிய மக்களின் திருமண நிதி சுமையை குறைக்கும் வகையில் ஜோடிகளுக்கு இலவசமாக ஆடை,தாலி மற்றும் மெட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டு திருமணம் நடைபெறும் என அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி ஏழை எளியோருக்கு இலவசமாக திருமணம் செய்யும் கல்யாண மஸ்து திட்டத்திற்கு வருகின்ற ஜூலை 1ம்தேதி முதல் பதிவு செய்யலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள 26 மாவட்ட மையங்களில் வருகின்ற ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 8.07 மணி முதல் 8.15 மணி வரை கல்யாண மஸ்து திட்டத்தின் மூலம் திருமணம் நடத்த முகூர்த்த நேரம் குறிக்கப்பட்டுள்ளது. இதற்காக வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி முதல் அந்தந்த மாவட்ட தலைநகரில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.