Categories
தேசிய செய்திகள்

கல்யாணமே வேணாம்…. அலறி ஓடிய மாப்பிள்ளை…. விரட்டி சென்ற மணப்பெண்…. பரபரப்பு சம்பவம்…..!!!

பீகார் மாநிலத்தில் திருமணம் பிடிக்காமல் மாப்பிள்ளை ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. நவடா என்ற பகுதியில் பகத்சிங் என்பவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் ஆகி உள்ளது.இதற்கு வரதட்சணையாக பைக் மற்றும் ஐம்பதாயிரம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நபர் திருமணம் செய்யாமல் ஏமாற்ற திட்டமிட்டுள்ளார்.இதனை அறிந்த பெண் வீட்டார் குறித்த நாளில் இந்த திருமணத்தை நடத்த முயன்ற போது அவர் அங்கிருந்து ஓடியுள்ளார். இதனால் அந்த பகுதியில் மக்கள் திரளவே மாப்பிள்ளை ஓட்டம் பிடித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த மணப்பெண் மாப்பிள்ளையை விடாமல் துரத்தியுள்ளார்.

பின்னர் அவரை துரத்திக் கொண்டே பின்னால் ஓடிய மணப்பெண் அவரை திருமணம் செய்து கொள்ள அழைத்து வந்தார். இதனை அறிந்த போலீசார் அங்கு வந்து சமாதானம் பேசி திருமணம் செய்து வைத்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |